நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

துறை விவரம்
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
தொடர்பு விபரங்கள்:
அமைச்சர்

பொதுப் பணித்துறை அமைச்சர்

மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர்

பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)

 

மின்னஞ்சல் : minister_pwd[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671129

அரசு செயலாளர்

 R. செல்வராஜ், இ.ஆ.ப.,

அரசு செயலாளர்

மின்னஞ்சல் : hwaysec@tn.gov.in

தொலைபேசி  : 25670959

துறை விவரம்:

தமிழ்நாடு, பாரம்பரியமாக வலிமையான தொழில் அடித்தளம் பெற்று விளங்குவதால் நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அங்கங்களான தொழில்துறை, தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தமிழ் நாட்டில் சாலை கட்டமைப்பு மற்றும் சிறு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும். சாலை மற்றும் பாலங்களுக்கு தரமான அளவுக் குறிப்புகளை நிர்ணயம் செய்வதில் தமிழ்நாடு 1954 ஆம் வருடத்திலிருந்து முன்னோடியாக திகழ்கிறது. இத்துறை, மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளையும் பராமரித்து மேம்படுத்துகிறது. பின்னர் சிறுதுறைமுகங்களும் இத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அதன் பின் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு இத்துறை செயல்பட்டு வருகிறது.

பாதுகாப்பான பயணம் மற்றும் நெரிசலற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் மாநிலத்தின் நெடுஞ்சாலை தொடரமைப்பு உருவாக்குவதும், பராமரிப்பதும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் முக்கிய குறிக்கோளாகும்.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு:
ஆவணங்கள்:
அறிவிப்புகள்:
சட்டங்கள் மற்றும் ஆணைகள் :
விதிகள் மற்றும் விதிமுறைகள்:
இணையதளங்கள் / தொடர்புடைய தொடுப்புகள்: