நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

துறை விவரம்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
தொடர்பு விபரங்கள்:
அமைச்சர்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சி, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) 

 

மின்னஞ்சல் : minister_housing[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் :  044-25674510

அமைச்சர்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர்

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர்

குடிசைத்தொழில்கள், சிறுதொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள்,  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.

 

மின்னஞ்சல் : minister_ruralind[at]tn[dot]gov[dot]in

 

தொலைபேசி எண் : 044-25674020

அமைச்சர்

இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்

 

மின்னஞ்சல் : minister_hrce[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25670374

அரசு செயலாளர்

Tmt  காகர்லா உஷா இ.ஆ.ப

அரசு கூடுதல் தலைமை செயலாளர்

மின்னஞ்சல் : hud@tn.gov.in

தொலைபேசி  : 25670516

துறை விவரம்:

இந்திய மொத்த மக்கள் தொகையில் 27.82 சதவிகிதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இயற்கையான மக்கள் தொகை பெருக்கத்தினாலும், கிராமப்பகுதிகளிலிருந்து நகரப்பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருவதாலும், கடந்த புத்தாண்டுகளில் நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியானது 27.16 சதவிகிமாக வளர்ந்தும், அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் தொகையானது 6.49 சதவிகித வளர்ச்சியுமாக மட்டுமே உள்ளது.

2011-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 7.2 கோடி மக்கள் தொகையில் 3.5 கோடி அதாவது 48.45 சதவிகிதம் மக்கள் நகரப்பகுதிகளில் வசித்து வருவதால் மிக அதிக நகரமயமான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

அபரிமிதமான நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக அனைவருக்கும் இயலக்கூடிய அளவில் குடியிருப்பு வசதியளித்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது. மேற்படி சவாலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் 1947-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநிலமாக தமிழகம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

வாங்கும் திறன் இன்மை, இடத்தின் உரிமை இன்மை, கிராமப்புறங்களில் சொத்துரிமை இல்லாமை, சாதகமான வீட்டுவசதி திட்டங்கள் இல்லாமை, கட்டிடம் கட்டுதல் குறித்த விழிப்புணர்வு இன்மை, பொது நிதி நிறுவனங்களின் நிதி உதவி இன்மை காரணங்களால் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் போதுமான வீட்டுவசதியின்றி வாழக்கூடிய நிலை உள்ளது. இதன் காரணமாக வீட்டுவசதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. தற்போது ஏறத்தாழ 35 சதவிகித வீடுகள் தற்காலிகமானதாகவும், பகுதி தற்காலிகமானதாகவும் அமைந்துள்ளன. இந்த பற்றாக்குறை, கிராமப்புறங்களில் மேலும் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் ஏறத்தாழ 48 சதவிகித வீடுகள் தற்காலிக மற்றும் பகுதி தற்காலிக கட்டிடங்களாகவே உள்ளன.

மாநில முழுமைக்கும் 9.11 இலட்சம் குடியிருப்பு கட்டிடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதில் 50 சதவிகிதம் நகரப்பகுதிகளில் தேவையாக உள்ளது.

கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள்

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து பிரிவு மக்களுக்கும் தரமான, இயலக்கூடிய அளவிலான விலையில் குடியிருப்பு கட்டிடங்கள் அமைத்து திட்டமிட்ட மற்றும் ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியை கருத்திற்கொண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக தனியார் பங்களிப்பில் உருவாகும் கட்டிடங்களில் 10 சதவிகிதம் கட்டிடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான ஒதுக்கீடாக சட்டபூர்வமாக ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இயலக்கூடிய அளவிலான குடியிருப்பு கட்டிடங்கள் ஏற்படுத்தித்தர பல்வேறு நிறுவனத்தாரும் அரசால் ஈடுபடுத்தப்பட்டு குடியிருப்பு வசதிகள் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நில திட்டமிடல் மற்றும் வளர்ச்சியானது, நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகர் ஊரமைப்பு இயக்கத்தின்கீழ் 1,28,869 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தின் இணக்கமான வளர்ச்சியை கருத்திற்கொண்டு முழுமைத் திட்டங்கள் விரிவான வளர்ச்சித் திட்டங்கள் தயாரித்து செயல்படுத்துதல், நில உபயோக நடைமுறைப்படுத்துதல், திட்டவிதிகள் மற்றும் நெறிமுறைகளை மேற்படி இரு துறைகளும் மேற்கொண்டு வருகின்றன.

சிறப்பான பயன்பாடு கொண்ட சாலை இணைப்புகள் ஏற்படுத்துதல், புறவழிச்சாலைகளின் பாதைகள் வகுத்தல, வட்டச்சாலைகள் திட்டமிடல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி இரு துறைகளும் சில உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி போக்குவரத்து வசதிகளை முறைப்படுத்தி சிறப்பித்து வருகின்றன.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு:
ஆவணங்கள்:
அறிவிப்புகள்:
சட்டங்கள் மற்றும் ஆணைகள் :
விதிகள் மற்றும் விதிமுறைகள்:
இணையதளங்கள் / தொடர்புடைய தொடுப்புகள்: