தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள்
மின்னஞ்சல் : minister_it[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25671512
Thiru குமார் ஜெயந்த், இ.ஆ.ப.,
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
மின்னஞ்சல் : secyit.tn@nic.in
தொலைபேசி : 25670783
தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்புயும், மனித ஆற்றலையும் தமிழகம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழு பயன்களையும் பெற்றுத்தந்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்திடவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல்மிக்க சீரிய தலைமையின்கீழ் இந்தியாவிலேயே, தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக உருவாக்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
தகவல் தொலைத் தொடர்பு சார்ந்த தேசிய மின் ஆளுமைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு மின் ஆளுமை திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது. சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அனைத்து அரசு சேவைகளும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே திறம்படவும், வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் கிடைக்கச் செய்ய வேண்டுமென்று உறுதி பூண்டுள்ளார்கள்.
தகவல் தொழில்நுட்பவியல் துறை,
1. மிக விரைவாக குடிமக்களுக்கு அரசின் தகவல்கள் மற்றும் பரிமாற்றங்கள் ஆகியவற்றை இணையம் வாயிலாக அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்குவதற்கும்,
2. கிராமம் மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கும்,
3. தமிழநாட்டை, தகவல் தொழில்நுட்பத்தினை மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கும்,
4. தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியை கணிசமான அளவுக்கு உயர்த்துவதற்கும்,
5. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கம்பிவட தொலைக்காட்சி சேவைகளை விரைவாக நியாயமான விலையில் வழங்குவதற்கும்,
6. கணினித் தமிழை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லுவதற்கும்,
7. குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தினை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவதற்கும் பாடுபடும்.