தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கட் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.
மின்னஞ்சல் : minister_labour[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25673034
Thiru K. வீர ராகவ ராவ், இ.ஆ.ப.,
அரசு செயலாளர்
மின்னஞ்சல் : labsec@tn.gov.in
தொலைபேசி : 25670472,PABX-5683
தொழிலாளர் துறையின் வரலாறு 1920 ஆம் ஆண்டில் துவங்கியது. ஆரம்ப காலத்தில் தொழில்முறைசாரா தொழிலாளர்களின் நலன்களை காப்பதையே முதன்மைப் பணியாக இத்துறை கவனித்து வந்தது. துரிதமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது அமைப்புசாரா தொழிலாளர்களது நலனையும் பேணும் வகையில் இத்துறையின் பணி விரிவடைந்துள்ளது.
அரசின் தாராளமயமாக்கல் கொள்கை, மாநிலத்தின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. நாட்டில், பெருமளவு தொழில்மயமான மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், இம்மாநிலம் பல தொழில்களில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இத்தகைய வளர்ச்சியின் காரணமாக இம்மாநில மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததுள்ளதுடன் நாட்டின் பெரிய திறன் மிக்க மனிதவள இருப்பினை கொண்ட மாநிலமாக மாறியுள்ளது.
மாநிலத்தின் துரிதமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை நிலைநிறுத்துவதில், தொழிலாளர் துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தொழில் நல்லுறவுக்கு, பொறுப்புணர்வும், திறமைமிக்க தொழிலாளர்களும், முற்போக்கான நடைமுறைகளை பின்பற்றும் நிர்வாகமும் இன்றியமையாதவை ஆகும்.
தொழிலாளர் துறை தொழிற்தகராறுகள் சட்ட நடைமுறைகள் வாயிலாக நுட்பமான சமரச தலையீடுகளின் மூலம் தொழில் தாவாக்களை தீர்த்து வைத்து இணக்கமான சூழலை உருவாக்கிடும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் இலக்குடன் தொழிலாளர் துறை பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. தொழில் நல்லுறவுகளை பேணிக்காக்கவும், தொழிலாளர் நலனை மேம்படுத்தவும் இத்துறை பல்வேறு சட்டங்களை அமலாக்கம் செய்துவருகிறது.