முதலமைச்சர்
மாண்புமிகு முதலமைச்சர்
பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன்.
மின்னஞ்சல் : cmo[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25672345
Tmt ரீட்டா ஹரிஷ் தக்கர், இ.ஆ.ப.,
அரசு செயலாளர்
மின்னஞ்சல் : pubsec(at)tn.gov.in
தொலைபேசி : 25671444
தலைமைச் செயலரின் நேரடி நிருவாகக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பொதுத்துறை, மாநிலத்தின் பொது நிருவாகம் சம்பந்தப்பட்ட சில முக்கியமான பணிகளைக் கவனித்து வருகிறது. பொதுத் துறையில் கையாளப்படும் சில முக்கியப் பணிகள் பின் வருமாறு
1.மேதகு ஆளுநர் பதவியேற்பு மற்றும் ஆளுநர் இல்லப்பராமரிப்பு தொடர்பான பணிகள்.
2.அமைச்சர்களின் பணி நியமனம் தொடர்பான பணிகள்.
3.மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களின் அலுவலகப் பணியமைப்பு தொடர்பான பணிகள்.
4.அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தல்.
5.தகைசால் பெருமக்களின் வருகையின்போது மரபு சீர்முறையிலான ஏற்பாடுகளை செய்தல்.
6.அரசு விமான போக்குவரத்து பிரிவு சம்பந்தமான பணிகளை கவனித்தல்.
7.தேசிய ஒருமைப்பாட்டுக் குழு, பன்மாநிலக்குழு மற்றும் தென்மண்டலக் குழு உட்பட, நடுவண் மற்றும் மாநில அரசுகளுக்கு பொதுவான விவரங்கள் குறித்து கவனித்தல்.
8.நடுவண் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் அயல்நாட்டு தூதரகங்களுடன் தொடர்பு கொள்ளல்.
9.இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோருக்கு பணிநியமனம் வழங்குதல் மற்றும் அவர்களின் பணியமைப்பு.
10.சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சனை மற்றும் அது தொடர்பான விசாரணை ஆணையங்களை அமைத்தல்.
11.மாநில மனித உரிமைகள் ஆணையம்.
12.சென்னையிலுள்ள அரசு விருந்தினர் இல்லம் மற்றும் அரசு ஓய்வு இல்லம், உதகமண்டலத்தில் உள்ள தமிழகம் விருந்தினர் இல்லம் மற்றும் புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் கூடுதல் தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றை நிர்வகித்தல்.
13.முன்னாள் படைவீரர்கள் நலன், அவர்களது குடும்ப நலன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் நிர்வாகம். (TEXCO)
14.முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருதல்.
15.உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழர்கள் சம்பந்தமான பொருண்மைகளை மத்திய அரசு வழியாகக் கையாளுதல்.
16.சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் முன்னாள் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் நலப் பணிகளைச் செயல்படுத்துதல்.
17.பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை அறிவித்தல்.
18.மக்கள் தொகை கணக்கெடுப்பு.
19.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்படும் மனுக்களை முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் ஆய்வு செய்து தீர்வு செய்தல்.
மேற்கூறியவற்றைத் தவிர இத்துறை, இந்திய தேசிய விழாக்களான சுதந்திர திருநாள் மற்றும் குடியரசுநாள் விழாக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்கிறது. மத்திய அரசால் சிறப்பு நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள தியாகிகள் நாள், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள், தேசிய ஒருமைப்பாட்டு நாள் போன்ற நாட்களில் தலைமை செயலக வளாகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் உறுதி மொழி ஏற்பு செய்து வைக்கும் நிகழ்ச்சிகளும் இத்துறையால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
வீர தீரச் செயல்களுக்கான மத்திய அரசின் விருதுகளுக்கு இத்துறையின் மூலம் பரிந்துரைகள் அனுப்பப்படுகின்றன. மாநில அரசின் விருதுகளான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம், வீர தீரச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஆகியவற்றுக்கான விருதாளர்கள் தேர்வு தொடர்புடைய பணிகளையும் இத்துறை மேற்கொள்கிறது.
சட்டம் ஒழுங்கு மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை ஆய்வு செய்யும் பொருட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டினை தலைமைச் செயலாளரின் நேரடி மேற்பார்வையில் இத்துறை ஏற்பாடு செய்கிறது.
இத்துறை தமிழகத்திற்கு உரிய நுழைவிசைவுடன் வரும் அனைத்து அயல்நாட்டினருக்கும் (பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டினர் தவிர) இந்தியாவில் தங்கும் காலத்தை நீட்டித்து வழங்கும் பணியை மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை நாட்டினரைப் பொறுத்த வரை, மைய அரசின் ஆணை பெற்ற பின்னரே நுழைவிசைவு நீட்டித்து வழங்கப்படுகிறது.
மேலும், இந்தியாவை விட்டு வெளிச்செல்ல விரும்புபவர்களுக்கு அனுமதியும் (Exit Permission) இத்துறையால் வழங்கப்படுகிறது. அயல் நாட்டினர் யாரேனும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது நுழைவிசைவு விதிகளை மீறினாலோ அல்லது அவர்கள் மீது எதிர்மறையான குறிப்புகள் ஏதேனும் பெறப்பட்டாலோ, அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றவும் / வெளியேற கோரியும் மைய அரசின் இசைவு பெற்று, இத்துறையால் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மேற்படிப்பிற்காகவோ / வேலை தேடியோ வெளிநாடுகளுக்குச் செல்ல விழைபவர்களுக்கு, தமிழகத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் மீது அதனை வழங்கிய நிறுவனங்களில் அவற்றின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்ட பின் இத்துறையால் சான்றுறுதி (Authentication) செய்யப்படுகிறது.
மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993 பிரிவு 21- படி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு 17.04.1997 முதல் செயல்பட்டு வருகிறது.
ஆணையம் சட்டப்பிரிவு, புலனாய்வுப்பிரிவு, நிர்வாகப்பிரிவு ஆகியவைகளை தன்னகத்தே கொண்டு செயல்படுகிறது. மனித உரிமை மீறல் பற்றிய புகார்களை எந்த மொழியிலும் கட்டணம் ஏதுமின்றி சம்பந்தப்பட்ட நபரோ அல்லது அவர் சார்பாக எவரும் ஆணையத்திற்கு எழுதி அனுப்பலாம்.