ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
மின்னஞ்சல் : minister_rdprd[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25672866
Thiru ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
மின்னஞ்சல் : ruralsec@tn.gov.in
தொலைபேசி : 25670769
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.ஊரக பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும். வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அமைகின்றன. இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத் தரமான வாழ்விற்குத் தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும்.
ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின் சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51.55 விழுக்காடு, அதாவது 3.72 கோடி மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர். மாநில மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் ஊரகப் பகுதிகளில் வாழ்வதாலும், அவர்களின் நலத்தை பேணுகின்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதாலும் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துதல், வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்தல, அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சியின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளாக கொண்டு செயல்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான பங்கேற்போடு வளர்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றுதன் மூலம் இத்தகைய குறிக்கோள்கள் எட்டப்படும்.
பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் நோக்கங்களை எய்திடும் வகையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் கடமைகளை திறம்பட நிறைவேற்றிட வழி வகை செய்தல் ஆகிய பொறுப்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையை சார்ந்தாகும். குக்கிராம அளவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, சுகாதாரத்தினை மேம்படுத்தி, இயற்கை வளங்களைக் காத்து, கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, வறுமையை அகற்றி வளமான தமிழகத்தை உருவாக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.