மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
மீன்வளம், மீன்வளர்ச்சிக் கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு
மின்னஞ்சல் : minister_fisheries[at]tn[dot]gov[dot]in, minister_ah[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25672265
பால்வளத்துறை அமைச்சர்
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்
பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி, கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்
மின்னஞ்சல் : minister_bcmw[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25672172
Thiru சத்ய பிரதா சாகு இ.ஆ.ப.,
அரசு முதன்மை செயலாளர்
மின்னஞ்சல் : ahsec@tn.gov.in
தொலைபேசி : 25672937
கால்நடையானது நிலமற்ற ஏழை விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆகியோருக்கு வருவாய் ஈட்டவும் வேலைவாய்ப்பு சூழ்நிலையை உருவாக்கவும் குறிப்பாக சுயதொழில் மூலம் எண்ணற்ற கிராமப்புற மற்றும் நகர்புற மக்களில் பெரும்பாலான மகளிர் கால்நடை பராமரிப்பில் ஈடுபடவும் வழிவகுத்துள்ளது. புரதம் மிகுந்த ஊட்ட சத்து உணவான பால், முட்டை, இறைச்சி ஆகியவை கால்நடை மூலம் பெறுகிறோம். ஒரு வட்டார மக்களின் சமூக கலாச்சார பின்னணியை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
கால்நடைதுறை, மாநிலத்தில் உள்ள கால்நடைகளின் பராமரிப்பு, உற்பத்தி பெருக்கம் ஆகியவற்றை கண்காணிக்கிறது. இதைத் தவிர சமூகத்தில் பின் தங்கியுள்ள ஏழை, ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதார உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் வெவ்வேறான திட்டங்களை நடைமுறைபடுத்துகிறது. மாநிலத்தில் பரவியுள்ள வெவ்வேறான கால்நடை துறைகள் மேற்கண்ட பணிகளை செய்கின்றன. துறையின் தொடர் நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சி திட்டங்களை நடைமுறை படுத்துவதுடன் நாட்டின் பொருளாதார சம சீர் நிலையை கால்நடை மற்றும் இயற்கைவளம் பேணிகாக்கிறது
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி
பால்வளத்துறை, நலிவடைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாய பெருமக்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடிய துறையாக மட்டுமல்லாது, மக்களுக்கு சரிவிகித சத்துணவான பாலை உற்பத்தி செய்யும் உன்னதத் துறையாகவும் திகழ்கிறது.
பால் உற்பத்தியில் பற்றாக்குறை நாடாக இருந்த இந்தியா, தற்சமயம் தன்னிறைவடைந்து உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது பெருமைக்குரியதாகும். மாண்புமிகு முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் பால் உற்பத்தியில் தமிழகம் 8வது இடத்தை அடைந்து, இரண்டாவது வெண்மைப் புரட்சியை நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2012-2013 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி நாளொன்றுக்கு 1.82 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது.
மீன் வளத்துறை
மாநிலத்தின் உணவு உற்பத்தியில் மீன்வளம் முக்கிய பங்கு வகிப்பதுடன், பெருவாரியான மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பின் அங்கமாக உருவெடுத்துள்ளது. மீன்பிடித்தல் கடந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில் பாரம்பரிய வாழ்வாதார நடவடிக்கைகளாகத் தொடங்கி, தற்சமயம் வணிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதுடன், மத்திய மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம், வாழ்வாதாரம், உணவுப்பாதுகாப்பு, கிராமப்புற வேலை வாய்ப்பினை உருவாக்குதல் மற்றும் அந்நிய செலாவணி ஈட்டுதல் ஆகியவற்றில் பெரும் பங்கு வகிக்கிறது.
மீன் உற்பத்தியில் சீரான உயர்வு மற்றும் மீன்வள ஆதாரங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றில், தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. புதிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்தல், மீன்பிடி துறைமுகம் / மீன் இறங்கு தளம் மற்றும் மீன் விற்பனைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், சூரை மீன்பிடிப்பிற்கு ஏற்ற வகையில் மீன்பிடிக்கலன்களை மாற்றிட அல்லது புதிதாக வாங்கிடும் திட்டத்தினை அறிமுகப்படுத்துதல், கடலோர மாவட்டங்களில் மீன் பதனிடும் பூங்காக்களை அமைத்தல், செயற்கை மீன் உறைவிடங்கள் நிறுவுதல், கடல் மீனவர்களுக்கு தடையற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்குதல் போன்ற பல புதிய திட்டங்களை கடல் மீனவர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வருகின்றது.