நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

துறை விவரம்
சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
தொடர்பு விபரங்கள்:
அமைச்சர்

சுற்றுலாத்துறை அமைச்சர்

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்

சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடு

 

மின்னஞ்சல் :minister_tourism[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25673126

அமைச்சர்

இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்

 

மின்னஞ்சல் : minister_hrce[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25670374

அரசு செயலாளர்

Dr  B. சந்திர மோகன், இ.ஆ.ப.,

அரசு முதன்மை செயலாளர்

மின்னஞ்சல் : toursec@tn.gov.in

தொலைபேசி  :  25670820

துறை விவரம்:

சுற்றுலா என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாகவும், பொருளாதார வளமைக்கான ஊக்க சக்தியாகவும் அறியப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் மனதிற்கு புத்துணர்ச்சி, மகிழ்ச்சி, இளைப்பாறுதல் மற்றும் புதிய அனுபவங்களை சுற்றுலா அளிக்கிறது. வான் வழி, இரயில், தரை வழிப் போக்குவரத்து மற்றும் கடல் வழிப் போக்குவரத்து, தங்கும் விடுதிகள், தொலைத் தொடர்பு மற்றும் பல்வேறு துறைகளிலும் பன்முக பொருளாதார வளர்ச்சிக்கான தாக்கத்தினை சுற்றுலா ஏற்படுத்துகிறது.

சுற்றுலா நேரடி வேலை வாய்ப்பினை உருவாக்குவதோடு, அதன் மறைமுக தாக்கமாக உள்ளூர் மக்களின் மேம்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. சேவைத் துறை என்ற நிலையிலிருந்து, இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் தொழில், தகவல் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் சாதனங்கள் உற்பத்தி போன்ற துறைகளைப் போல சுற்றுலாத் துறையும் ஒரு முன்னணி ஏற்றுமதி தொழிலாக தற்போது உருவாகியுள்ளது.

எனவே, சுற்றுலாத்துறைக்கு அதிக ஊக்கமளிக்க மைய மற்றும் மாநில அரசுகளால் அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலுக்கும், சுற்றுலா தலங்களை சந்தைப்படுத்துதலுக்கும் ஒரு புதிய ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்றவை எளிதாகவும், நல்லமுறையிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்வதன் மூலம், அவர்கள் பயணம் செய்த இடத்திற்கு மீண்டும் வருகை தரவும், அவர்களின் நல்ல அனுபவத்தை பிறருக்கு பகிர்வது சிறந்த விளம்பரமாக அமையும்.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு:
ஆவணங்கள்:
அறிவிப்புகள்:
சட்டங்கள் மற்றும் ஆணைகள் :
விதிகள் மற்றும் விதிமுறைகள்:
இணையதளங்கள் / தொடர்புடைய தொடுப்புகள்: