துணை முதலமைச்சர்
மாண்புமிகு துணை முதலமைச்சர்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள், திட்டம் மற்றும் வளர்ச்சி
மின்னஞ்சல் : deputycm_office@tn.gov.in
தொலைபேசி எண் : 044-25671024
Thiru அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப.,
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
மின்னஞ்சல் : ywssec@tn.gov.in
தொலைபேசி : 25671233
மனிதவள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இளைஞர்களிடையே சுகாதாரம், தோழமை, நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த தெளிவான தாக்கத்தை உண்டாக்கும். அனைத்து தரப்பு இளைஞர்களிடையே நல்ல குடிமகனாக விளங்குவதற்கான தகுதிகள், சமுதாய பனிக்காக தங்களை அர்ப்பணித்தல் போன்ற பண்புகளை வளர்ப்பதே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிக்கோளாகும். தனிநபர் பண்புகளை வளர்த்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் குறிக்கோளுக்காக பொறுப்பேற்கும் எண்ணத்தை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக இளைஞர்களிடையே தொண்டு செய்யும் மனப்பான்மையை நிலைநிறுத்த மற்றும் வலுவூட்டுவதை இத்துறை வலியுறுத்துகிறது. விளையாட்டு மற்றும் போட்டிகள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இளைஞர்களிடையே அடிப்படை பண்புகளை வளர்த்து, அவர்களை பொறுப்புமிக்க குடிமகன்களாக மலரச் செய்கின்றன. நமது மாநிலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் பெற்றிருக்கும் உறுதியான உள்ளாற்றல் மற்றும் போட்டி மனப்பான்மைகளை கண்டறிந்து, தீவிரமாக வளர்க்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள இளைஞர்களின் திறமைகளை கண்டறிய முயற்சித்து, அதன் மூலம் அவர்களின் திறமையை மேம்படுத்த சந்தர்ப்பம் அளிப்பதற்கும், போட்டியில் சிறந்து விளங்கும் நாட்டத்தினை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்.