கூட்டுறவுத் துறை அமைச்சர்
மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்
கூட்டுறவுத் துறை
மின்னஞ்சல் :minister_coop[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25671184
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர்பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.
மின்னஞ்சல் :minister_food[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25671427
Dr J. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
மின்னஞ்சல் : coopsec@tn.gov.in
தொலைபேசி : 25676910 PABX:5647
1. தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவு இன்றியமையாப் பங்கினை ஆற்றிவருகின்றன. அவை கடன் வழங்குதல், விவசாய விளைபொருட்கள் விற்பனை மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் இடுபொருள், நுகர்பொருள் ஆகியவற்றை நியாயமான விலையில் விற்பனை செய்தல் ஆகிய பணிகளை ஆற்றிவருகின்றன.
2. தமிழ்நாட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் பொதுவாக கீழ்க்கண்ட வகையில் அடங்கும்.
• கடன் கூட்டுறவுகள்
• விற்பனைக் கூட்டுறவுகள்
• நுகர்வோர் கூட்டுறவுகள்
• கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சி அளிக்கும் கூட்டுறவுகள்
3. கடன் கூட்டுறவுகள் மற்றும் வங்கிகள், கிராம மற்றும் நகரக் கடன் தேவைகளை நிறைவு செய்கின்றன. விவசாய விளைபொருள் விற்பனையில் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் உதவி புரிகின்றன. நுகர்வோர் கூட்டுறவுகள் மாநிலத்தில் உள்ள தங்களது பரவலான அலகுகள்
மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதில் உதவி புரிகின்றன. இத்தகைய கூட்டுறவுகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளை நடத்தி வருகின்றன.
4. கூட்டுறவுக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்களிடையே கூட்டுறவுக் கொள்கைகளைப் பரப்புதல், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தக்க பயிற்சி வழங்கி செயல் திறனை மேம்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்கின்றன.
5. பொது மக்களின் தேவைகளைச் சிறந்த முறையில் நிறைவு செய்யவும் கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான அளவிற்கு பங்காற்றவும் ஏதுவாக கூட்டுறவுகளை நவீன மயமாக்கி வலிமைப்படுத்துவது அரசின் கொள்கையாகும்.
மாநில அரசின் உணவுக் கொள்கையின் மைய நோக்கம் பசிப்பிணியை அறவே களைய வேண்டும் என்பதும் அந்நிலையை அடைவதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றுவதாகும். அனைவருக்குமானப் பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துதல், உணவுப் பொருட்களின் விலையை மேலாண்மை செய்தல், பொது விநியோகத் திட்ட பொருள்களை செறிவூட்டி போதிய அளவில் ஊட்டச்சத்து அளித்தல் ஆகிய முன்முனை உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் இந்நிலையை அடைய முடிகிறது.
மாநில அரசின் உணவுக் கொள்கையின் இதயம் மற்றும் உயிர் போன்றது அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம். விடுதலின்றி அனைவருக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் போதுமான அளவு உணவுப் பொருட்கள் மக்கள் வாங்கும் திறனறிந்து விற்பனை விலையை நிர்ணயித்து வழங்குதல், எளிதில் மக்கள் அணுகிப் பெறக்கூடிய வகையில் நியாயவிலைக் கடைகளை அமைத்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைந்ததாகும்.