நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

துறை விவரம்
நிதித் துறை
தொடர்பு விபரங்கள்:
அமைச்சர்

நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்

மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்

நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் மற்றும் தொல்லியல் துறை, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம்

 

மின்னஞ்சல் : minister_finance[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671696

அரசு செயலாளர்

Thiru  T. உதயச்சந்திரன், இ.ஆ.ப

அரசு முதன்மை செயலாளர்

மின்னஞ்சல் : 

தொலைபேசி  : 25671173,PBX No-5636

துறை விவரம்:

தமிழக அரசின் பொது நிதி நிருவாகப் பொறுப்பு நிதித்துறையைச் சார்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரித்து சட்டப் பேரவையில் தாக்கல் செய்வதில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலக் கருவூலத்தை நிருவகித்து வரும் நிதித்துறை, வரவுகளையும் செலவுகளையும் சீராகப் பராமரிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு வகிப்பதோடு கடன் பொறுப்புகளைத் திருப்பிக் கொடுக்கும் பொறுப்பினையும் வகிக்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அரசின் நிதி இலக்குகளை எய்தும் பொருட்டும், வரவுக்கேற்றபடி செலவினங்களைச் சீர் செய்து, தேவை, செலவுக்கேற்ற பயன், வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கம், நிதி நடைமுறை, முதலியவற்றிற்கேற்ப துறைகளின் செயற்குறிப்புகளை நிதித்துறை கூர்ந்து ஆய்வு செய்கிறது.

நிதித் துறையின் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் பின்வரும் ஏழு துறைகள் இயங்கி வருகின்றன.

(i) கரூவூலக் கணக்குத் துறை

(ii) உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை

(iii) சிறு சேமிப்புத் துறை

(iv) அரசு தகவல் தொகுப்பு விவர மையம்

(v) கூட்டுறவு தணிக்கைத் துறை

(vi) தலைமை அரசுத்துறை நிறுவனத் தணிக்கைத்துறை

(vii) ஓய்வூதிய இயக்ககம்

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு:
ஆவணங்கள்:
அறிவிப்புகள்:
சட்டங்கள் மற்றும் ஆணைகள் :
விதிகள் மற்றும் விதிமுறைகள்:
இணையதளங்கள் / தொடர்புடைய தொடுப்புகள்: