இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

அரசு ஆணைகள்

வேளாண்மை - உழவர் நலத் துறை

தேதி

11-12-2023

அரசாணை (நிலை) எண்‌. 263

வேளாண்மை - உழவர்‌ நலன்‌ - தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ - 2023.2024-ஆம்‌ ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை... மாண்புமிகு வேளாண்மை — உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பு - பூச்சிகள்‌ அருங்காட்சியகத்தை மேம்படுத்துதல்‌” - நிர்வாக மற்‌றும்‌ நிதி ஒப்பளிப்பு - ஆணை-வளியிடப்படுகிறது.

தேதி

28-11-2023

அரசாணை(நிலை) எண்‌.259

வேளாண்மை ழவர்‌ நலத்துறை - 2023-2024 ஆம்‌ ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கை அறிவிப்பு வேளாண்மை - உழவர்‌ நலன்‌ - பழங்குடியின விவசாயிகளின்‌ வாழ்வாதார மேம்பாட்டுக்காக வேளாண்மை உழவர்‌ நலத்துறை, இதா அரசுத்‌ துறைகள்‌ பெரும்‌ பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள்‌ மற்றும்‌ தொண்டு நிறுவனங்கள்‌ இணைந்து செயல்படும்‌ விதமாக ஆணை-வெளியிடப்படுகிறது.

தேதி

21-11-2023

அரசாணை (நிலை) எண்‌. 253

வேளாண்மை - உழவர்‌ நலன்‌ - தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்‌ - 2023-2024-ஆம்‌ ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை - அறிவிப்பு எண்‌. மற்றும்‌ 15 - 2023-2024.ஆம்‌ ஆண்டில்‌ 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 2 சிறுதானிய மண்டலங்களில்‌ தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தினை ரூ.6529.076 இலட்சம்‌ திட்ட மதிப்பீட்டில்‌ செயல்படுத்துதல்‌ - ரூ. 1978.000 இலட்சம்‌ நிதி ஒப்பளிப்பு வழங்குதல்‌ மற்றும்‌ ரூ.4551.076 இலட்சத்தினை மற்ற ஒன்றிய, மாநில அரசு திட்டங்களில்‌ ஒருங்கிணைத்து செயல்படுத்திட அனுமதி வழங்குதல்‌- ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2023

அரசாணை (நிலை) எண்‌. 249

வேளாண்மை - உழவர்‌ நலன்‌ - தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ - தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இளம்‌ வேளாண்‌ அறிவியலில்‌ பயிர்ப்பெருக்கம்‌ மற்றும்‌ மரபியல்‌ பாடங்களில்‌ அதிக மதிப்பெண்‌ பெற்று முன்னிலை பெறும்‌ மாணவருக்கு டாக்டர்‌.எம்‌.எஸ்‌.சுவாமிநாதன்‌ அறநல்கை விருது” ஆண்டுதோறும்‌ வழங்குதல்‌-ஆணை -வளியிடப்படுகிறது.

தேதி

27-10-2023

அரசாணை (நிலை) எண்‌. 228

வேளாண்மை - உழவர்‌ நலன்‌ - தென்னை பயிர்‌ தொடர்பான பொருண்மையை வேளாண்மைத்துறையின்‌ நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து தோட்டக்கலை மற்றும்‌ மலைப்பயிர்கள்‌ துறையின்‌ நிர்வாக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ மாற்றம்‌ செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-10-2023

அரசாணை (நிலை) எண்‌.220

வேளாண்மை - உழவர்‌ நலன்‌ - தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ - தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, ஈச்சங்கோட்டையில்‌ இயங்கிவரும்‌ அரசு வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்திற்கு “டாக்டர்‌. எம்‌.எஸ்‌. சுவாமிநாதன்‌ வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌” எனப்‌ பெயர்‌ மாற்றம்‌ செய்தல்‌ - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

11-09-2023

அரசாணை (நிலை) எண்‌. 202

வேளாண்மை - உழவர்‌ நலன்‌ - மண்‌ பரிசோதனை நிலையங்கள்‌ (36), நடமாடும்‌ மண்‌ பரிசோதனை நிலையங்கள்‌ (16) மற்றும்‌ மத்திய கட்டுப்பாட்டு ஆய்வகம்‌ (குடுமியான்‌ மலை) ஆகிய திட்டங்களை 01.04.2023 முதல்‌ 31.03.2024 வரை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2070.66 இலட்சம்‌ நிதி ஒப்பளிப்பு வழங்குதல்‌ ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-08-2023

அரசாணை (நிலை) எண்.197

வேளாண்மை-உழவர் நலன் – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் – சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் துவங்கப்பட்ட வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 2023-2024 -ஆம் ஆண்டிற்கான கூடுதல் வரவு-செலவு தேவைகளுக்காக ரூ.2.16 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

30-08-2023

அரசாணை (நிலை) எண்.195

வேளாண்மை-உழவர் நலன் – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் – கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்ட வோண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 2023-2024 -ஆம் ஆண்டிற்கான கூடுதல் வரவு-செலவுத் தேவைகளுக்காக ரூ.48,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

24-08-2023

அரசாணை (நிலை) எண்.192

வேளாண்மை-உழவர் நலன் – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் – 2023-2024 -ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை -உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தாவரவியல் பூங்காவினைச் சீரமைத்தல் – நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

22-08-2023

அரசாணை (நிலை) எண்.188

வேளாண்மை-உழவர் நலன் – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் – சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் துவங்கப்பட்ட வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 2023-2024 -ஆம் ஆண்டிற்க்கான கூடுதல் வரவு-செலவு தேவைகளுக்காக ரூ,83,77,540/-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

21-08-2023

அரசாணை (நிலை) எண்.187

வேளாண்மை-உழவர் நலன் – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் – தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக் குளத்தில் இயங்கிவரும் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு “வ.உ. சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்” எனப் பெயர் மாற்றம் செய்தல் - ஆணை- வெளியிடப்படுகிறது

தேதி

28-07-2023

அரசாணை (நிலை) எண்.168

வேளாண்மை-உழவர் நலம் – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் – 2023-2024 -ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை –உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக் குளம் வேளாண்மைக் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையத்தினை அமைக்க நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

28-07-2023

அரசாணை (நிலை) எண்.167

வேளாண்மை-உழவர் நலம் – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் – 2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண் –உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியில் பனைக்கென தனி ஆராய்ச்சி நிலையத்தினை அமைக்க நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

20-07-2023

அரசாணை (நிலை) எண்.156

வேளாண்மை-உழவர் நலத் துறை - வேளாண் நிதிநிலை அறிக்கை – 2023-2024 – கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – 2023-2024 – வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மற்றும் சர்க்கரைத் துறை மூலம் 2,504 கிராம ஊராட்சிகளில் திட்டம் செயல்படுத்துதல் – ரூ,189.73 கோடிக்கான நிருவாக அனுமதியும், ரூ,182.5527 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அங்கீகரித்து ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

17-07-2023

அரசாணை (நிலை) எண்.154

வேளாண்மை-உழவர் நலன் - வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் வழங்கும் திட்டத்தில் விவசாயிகளின் நிதிச் சுமையினை குறைத்து, அதிக எண்ணிக்கையில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், இயந்திரங்களுக்கான மொத்தத் தொகையை விவசாயிகள் செலுத்துவதற்குப் பதிலாக, மானியம் போக விவசாயிகளின் பங்களிப்புத் தொகையினை மட்டும் செலுத்துவது – செயலாக்க நெறிமுறையில் மாறுதல் செய்து அனுமதியளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-05-2023

G.O.Ms.No.98

வேளாண்மை-உழவர் நலன் – வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - 2023-2024-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 25 உழவர் சந்தைகளை ரூ.818.54 இலட்சம் மதிப்பீட்டில் மாநில அரசு நிதியுதவியுடன் புனரமைத்தல் - அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-05-2023

G.O.Ms.No.92

வேளாண்மை-உழவர் நலன்- வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 50 உழவர் சந்தைகளுக்கு உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெறுதல் – 25 இலட்சம் ரூபாய் செலவில் மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த அனுமதி வழங்குதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

18-05-2023

Letter (2D) No.100

வேளாண்மை-உழவர் நலன்- 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – அறிவிப்பு எண்.53– கொப்பரைத் தேங்காய் கொள்முதல் - நிருவாக அனுமதி வழங்குதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

16-05-2023

G.O.Ms.No.91

வேளாண்மை-உழவர்நலத்துறை- 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – பல்வேறு அறிவிப்புகள் – மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் 2023-2024இன் கீழ் செயல்படுத்தி ரூ.3063.23 இலட்சம் மற்றும் உயர் மதிப்பு திட்ட இனங்களில் ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் 20 சதவிகிதம் வழங்க ரூ.6.13 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

15-05-2023

G.O.MS.No.89

வேளாண்மை-உழவர்நலத்துறை- 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை அறிவிப்பு – ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண் வளத்தை உயர்த்துவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்குதல் - ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

11-05-2023

Govt Letter D. No.115

வேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை –அறிவிப்பு எண்.59 – வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானிபொறுப்பு அலுவலராக நியமனம் –செயல்முறை அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.

தேதி

10-05-2023

G.O.Ms.No.85

வேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு எண்.51 – உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சிப்பம் கட்டுதல், பயிற்சி வழங்குதல் ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

09-05-2023

G.O.Ms.No.82

வேளாண்மை- உழவர்நலன் – வேளாண்மைப் பொறியியல் துறை – 2023-24ஆம் ஆண்டில் புதிய வேளாண்மைப் பொறியியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த செயல்விளக்கங்கள்/ தொழில்நுட்ப பிரிமாற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்குதல் – ஆணை – வெளியிடப் படுகிறது.

தேதி

09-05-2023

G.O.D.No.114

வேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர்நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு – வேளாண்மை விரிவாக்க மையங்களில் புதிய மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 348 வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை முறையினை செயல்படுத்துவது என்ற அறிவிப்பிற்கு செயலாணை -வெளியிடப்படுகிறது.

தேதி

09-05-2023

G.O.Ms.No.83

வேளாண்மை- உழவர்நலன் – வேளாண்மைப் பொறியியல் துறை – தனியாருக்குச் சொந்தமான டிராக்டர்களின் உரிமையாளர்களின் விவரங்கள் – வேளாண்மை இயந்திரங்கள், கருவிள், டீசலபம்புசெட், மின்சாரபம்புசெட், சூரியமின்சக்தியால் இயங்கும் பம்புசெட்ஆகியவற்றை பழுது நீக்குபவர்களின் விவரங்கள் – இ-வாடகை செயலியில் பதிவேற்றம் செய்தல் – உழவன் செயலியில் இணைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-05-2023

G.O.D.No.112

வேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களால்அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் – தகவல் பரிமாற்றக் குழு உருவாக்கி செயல்படுத்திட வட்டார அளவில் விவசாயிகளைக்கொண்டு வாட்ஸ்ஆப் குழு உருவாக்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-05-2023

Govt Letter D. No.109

வேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை –அறிவிப்பு எண்.60 – உழவர் உற்பத்தியாளர் நிறுவன வளர்ச்சிக்கு பல்கலைக்கழகஉதவி – செயல்முறை அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.

தேதி

05-05-2023

Govt. Letter D. No.108

வேளாண்மை-உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – அறிவிப்பு எண்.51 – வேளாண்மையில் நானோ தொழில்நுட்பம் – பரவலாக்குதல் – செயல்முறை அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.

தேதி

04-05-2023

G.O.D.No.102

வேளாண்மை-உழவர்நலத்துறை– 2023-2024-ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை -– அறிவிப்புஎண்.4 –காட்டுப்பன்றி விரட்டி மருந்து (Wild Boar Repellent) 50 சதவிகித மானியத்தில்ரூ 4.00 இலட்சம் செலவில் வழங்குதல் – ஆணை – வெளியிடப் படுகிறது.

தேதி

26-04-2023

G.O.D.No.90

வேளாண்மை - உழவர்நலன் 2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை – மாண்புமிகு வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு – பயிர்சாகுபடி விவரங்களை கிராமவாரியாக சேகரித்து, கனிமயமாக்கி புதிய இணையதளமான ‘GRAINS’ Portal (Grower Online Registration of Agriculture Inputs System) என்ற இயங்குதளம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-04-2023

Letter (D) No.86

வேளாண்மை - உழவர் நலத் துறை - வேளாண்மை விற்பனை - வேளாண் வணிகம் - வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2023-2024 - அறிவிப்பு எண். 48 - 25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் - தொடர்பாக

தேதி

16-03-2023

G.O.Ms.No.44

வேளாண்மை-உழவர் நலத் துறை – கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – 2021-2022 மற்றும் 2022-2023-ஆம் ஆண்டுகளுக்கான திட்டப் பணிகளை உழவர் நலன் சார்ந்த இதர 7 துறை திட்டங்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்துதல் – நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது – உழவர் நலன் சார்ந்த இதர 7 துறைகளின் திட்டங்கள்- செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அங்கீகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-01-2023

G.O.Ms.No.9

வேளாண்மை-உழவர் நலன் – சிறப்பு விருது – 2021-22 – நெல் சாகுபடியில், திருந்திய நெல் சாகுபடி தொழில்- நுட்பத்தினை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கு குடியரசுத் தினத்தன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திரு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது மற்றும் பரிசு வழங்குதல் - ஆணை – வெளியிடப்படுகிறது .