அறிமுகம்

கடல்சார் போக்குவரத்து என்பது உலக அளவில் மிகப் பெரிய மற்றும் திறமையான போக்குவரத்து வழி முறையாகும். சர்வதேச கடல்சார் சமூகத்தில் கப்பல் மாலுமிகளை உருவாக்குவதில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது.

கடல்சார் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குவதற்காகவும் கடல்சார் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் ஆகிய ஒரே நோக்கத்துடன் தமிழக அரசு 1998 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகத்தை தூத்துக்குடியில் நிறுவியது. தரமான கல்வியை உறுதி செய்வதற்காகவும், பயிற்சி கழகத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிட வசதியாகவும் மத்திய / மாநில அரசின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய ஆளும் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது . தற்போது தமிழக கடல்சார்வாரியத்தின் முதன்மை செயலாளர் / தலைவர், சென்னை ஆளும் குழுவின் தலைவராகவும், பயிற்சி கழகத்தின் விவகாரங்களை நிர்வகிப்பவராகவும் உள்ளார்.

இடம்

இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகவும் ,மாவட்டத்தின் தலைமையிடமாக விளங்கும் முத்துநகர் தூத்துக்குடியில் தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் அமைந்துள்ளது. இது நாட்டின் பிறபகுதிகளுடன் வான் வழி, சாலை மற்றும் தொடர்வண்டி மூலம் வெகுவாக இணைக்கப்பட்டுள்ளது. வாகைக்குளம் விமானநிலையம் தூத்துக்குடியில் இருந்து 12 கி.மீதூரத்தில் இது அமைந்துள்ளது.

Entrance to TNMA Main Building of TNMA

Entrance

Main Building

அம்சங்கள்:

பயிற்சி கழகம் ஒரு பரந்தவளாகத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இது இரண்டு அடுக்கு கப்பல் வடிவத்துடன் மற்றும் தங்கும் விடுதியுடன் கூடிய வகுப்பறைகளையும் கொண்டது. வகுப்பறைகளில் பல்வேறு வகையான கப்பல் மாதிரிகள் மற்றும் எந்திரங்கள், கடல்சார் உபகரணங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் கொண்ட விசாலமான சாப்பாட்டு கூடம் பயிற்சியாளர்களின் உணவுத் தேவைகளையும் கவனித்துக் கொள்கிறது. உட்புற மற்றும் வெளிப்புற பொழுதுபோக்கு வசதிகள் வளாகத்திற்குள் உள்ளன.

Hostel Berths

Hostel Berths

Inspection

சிறப்பு அம்சங்கள்

பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற அரசு நிறுவனம் அதன் சொந்த மற்றும் வாடகை கப்பல்களைக் கொண்டு சரக்குகளை கையாண்டு வருகிறது. அவை தொடர்ந்து நிலக்கரியை தூத்துக்குடி மின் நிலையத்திற்கு கொண்டு வருகின்றன, மேலும் தூத்துக்குடியில் நவீனவசதிகளுடன் கூடிய கடல் பட்டறையையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இது கப்பல்களில் நடைமுறை பயிற்சி மற்றும் கடல் விரிவான கரை பயிற்சிகளுக்கு பெரிதும் உதவுகிறது. எனவே தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் புகழ் பெற்ற கல்விக் கூடங்களுடன் ஒப்பிடக் கூடிய வகையில் சிறந்த பயிற்சி வசதிகளைக் கொண்டிருப்பதாக பெருமை கொள்ளலாம்..

 


For more information contact us at tnma1998[at]gmail[dot]com
[ Home ] [ About Us ] [ Courses ] [ Students ] [ Contact Us ]