|
பயிற்றுவிக்கும்வகுப்புகள்
தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் பொதுமுறை மாலுமி பயிற்சிக்கான பின்வரும் படிப்புகளை வழங்குகிறது. :
� Pre-Sea Course for General Purpose
Ratings.
-
தகுதி
திருமணமாகாத ஆண் மற்றும் கீழ்கண்ட அங்கீகரிக்கப்பட்ட வாரியத் தேர்வுகளில் எதிலாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்:-
1)
(அ) பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சராசரி 40 சதவிதம் மதிப்பெண்கள் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ஆ) பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் சராசரி 40 மதிப்பெண்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
(இ) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாரிய தேர்வு மூலம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேன்டும்.
(அல்லது)
2)
(அ) அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இரண்டு வருட தொழில்பயிற்சி பெற்று சராசரி 50 சதவிதம் மதிப்பெண்கள் இறுதி வருட தேர்வில் பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
(ஆ) பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் சராசரி 40 மதிப்பெண்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
(இ) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாரிய தேர்வு மூலம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேன்டும்.
(அல்லது)
3)
(அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ மற்றும் இளங்கலை பயின்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சராசரி 40 சதவிதம் மதிப்பெண்கள் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ஆ) பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் சராசரி 40 மதிப்பெண்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
(இ) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாரிய தேர்வு மூலம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேன்டும்.
-
வயது
:-பயிற்சி தொடங்கும் தேதியில் கட்டாயம் 17½ ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் மற்றும் 25 வயதுக்குக்குறைவாக இருக்க வேண்டும்.
எஸ்சி / எஸ்டி மனுதாரர்களுக்கு மற்றும் பிற்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட அளவு வயது உச்சவரம்பு தளர்த்தபடும் .
-
கால அளவு:
6 மாதங்கள் (25 வாரங்கள்).
-
மருத்துவ உடற்தகுதி:-
எம்.எஸ் (மருத்துவ பரிசோதனை விதிகள் 2000) இன் படி மருத்துவரீதியாக தகுதி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மருத்துவ பரிசோதனை / பார்வை சோதனை டைரேக்டரேட் ஜெனரல் ஆப் ஷிப்பிங் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் வழியாக நடத்தப்படும்.
கண் பிரச்சனைகள் நிறகுருட்டுத்தன்மை உடையவர்கள் இந்த பாடபயிற்சிக்கு தகுதியற்றவர்கள்.
-
கட்டணம்:-
ரூ. 1,50,000 / - (கல்விகட்டணம், தங்குமிடம் , சீருடை பயிற்சி புத்தகங்கள் போன்றவை அடங்கல் )
-
துவக்கம்:-
வகுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் முதல் வேலை நாளில் துவங்கும்.
ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பயிற்சி வகுப்புகள் பரந்த அனுபவமுள்ள வணிககப்பலின் தலைமை பொறியாளர்கள் மற்றும் கப்பல் தலைமை அதிகாரிகள் வழியாக நேர்த்தியாக பயிற்று விக்கப்படுகின்றன.
|
|
Classrooms |
Workshop |
CLASS ROOM
பணிமனை பயிற்சி
பயிற்சி கழகம் ஐஎஸ்ஓ 9001-2015 தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
கடலுக்கு முந்தைய பொது நோக்கம் மாலுமி பயிற்சி வகுப்புகள் நிறைவுற்றதும்
பயிற்சியாளர்கள் அகில இந்திய கடல்வாரிய தேர்வால் நடத்தப்படும் எழுத்து, நடைமுறை, வாய்வழி மற்றும் நேரடி கணினி தேர்வுகள்
ஆகியவற்றில் முறையாக வெற்றி பெற வேண்டும். இதனிடை டைரேக்டரேட் ஜெனரல் ஆப் ஷிப்பிங் மூலம் தொடர் பணி
சான்றிதழ் குறிபேடு (சி.டி.சி) மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். அகில இந்திய கடல்வாரியாத் தேர்வால்
நடைபெறும் அனைத்து தேர்வுகளிலும் 100% இலக்கை அடைய தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் அனைத்து
நடவடிக்கைகளையும் ஆர்வமுடன் எடுத்து வருகிறது.
தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம் பின் வரும் பயிற்சி சான்றிதழ் மற்றும்
கண்காணிப்பு (எஸ்.டி.சி.டபிள்யூ) - 1978 பயிற்சிகளை நடத்துகிறது. இந்த பாடவகுப்புகள் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு முறை
நடத்தப்படுகின்றன, மேலும் தேவைப்பட்டால் அதிகமான வகுப்புகள் கடற்மாலுமிகளின் தேவையைப் பொறுத்து நடத்தப்படும்.
வரிசை எண்
|
பயிற்சி வகுப்பின் பெயர்
|
கால அளவு
|
கட்டணம்
|
1
|
தொடக்க முதலுதவி (EFA)
|
2.5 நாட்கள்
|
ரூ. 1,600/-
|
2
|
தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புகள் (பி.எஸ்.எஸ்.ஆர்) (PSSR)
|
4 நாட்கள்
|
ரூ. 2,500/-
|
3
|
சர்வைவல் டெக்னிக்ஸில் தேர்ச்சி (பிஎஸ்டி) (PST
|
3 நாட்கள்
|
ரூ. 2,500/-
|
4
|
தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு (FPFF)
|
3 நாட்கள்
|
ரூ. 3,000/-
|
5 |
நியமிக்கப்பட்ட பாதுகாப்பு கடமைகள் பயிற்சியாளர்கள் (எஸ்.டி.எஸ்.டி.எஸ்.டி) (STSDSD) |
3 நாட்கள் |
ரூ. 1,800/- |
6 |
PST மற்றும் FPFF புதுப்பிப்பித்தல் |
1 நாள் |
ரூ. 4,000/- |
7
|
எண்ணெய் ரசாயன சரக்கு கப்பல் இயக்குதல் (OCTCO)
|
6 நாட்கள்
|
ரூ. 4,200/-
|
குறிப்பு : இது போன்ற வேளைகளில் , பாட நெறி முற்பட்ட கட்டணம் ஒரு சேர பயிற்சி
வகுப்புகள் சேர்வதின் மூலம் கட்டணதளவிற்குரியது.. (பாடநெறி பொருள், மதிய உணவு, தேநீர் மற்றும் வசதிகள் இதர
கூடுதல் செலவு இல்லாமல் வழங்கப்படும்) பயிற்சி வகுப்புகள் STCW 1978 விதி முறைகள் மூலமாகவும் மற்றும் டைரேக்டரேட்
ஜெனரல் ஆப் ஷிப்பிங் அறிவுறுத்தல் படியும் நடை பெறுகின்றன.
|