எங்களைப் பற்றி
கருவூலக் கணக்குத் துறை அரசின் நிதி சார்ந்த பட்டுவாடா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரவு செலவு கணக்குகளை தயார் செய்தல், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், அரசின் அனைத்து துறை சார்ந்த செலவினங்களுக்கு உரிய பட்டியல்களை பெற்று பரிசீலித்து அங்கீகரித்து உரிய தொகையை வழங்குதல், ஒய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், முத்திரைத் தாட்கள் வழங்குதல் மற்றும் பல பணிகளை செய்து வருகிறது.
துறை பற்றிய தகவல்கள்
1.
ஆரம்ப காலத்திலுருந்தே கருவூலங்கள் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில்
இயங்கி வந்தன.
2. 1954ம் ஆண்டு சென்னையில் சம்பளக் கணக்கு அலுவலகம் உருவாக்கப்
பட்டது. அதன் கருவூல மற்றும் தணிக்கை நடவடிக்கைகள் தலைமை செயலக
நிதித்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
3. 1962 ம் ஆண்டு நிதித்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் கருவூல மற்றும்
கணக்குத் துறை உருவாக்கப்பட்டது. அப்போது இயங்கி வந்த அனைத்து
மாவட்டக் கருவூலங்களும் (12 மாவட்டங்கள் சென்னை தவிர) மாவட்டக்
கருவூலங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த சார்நிலைக் கருவூலங்களும்
சென்னையில் சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து
அலுவலகங்களும் இத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
4. கருவூலக் கணக்கு ஆணையரகம், No.571, 3 வது தளம், அம்மா வளாகம்,அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 35 இயங்கி வருகிறது.
5. இத்துறையின் கீழ் தற்சமயம் தமிழகம் முழுவதும் இயங்கி வரும்
அலுவலகங்கள்
அ. சம்பளக் கணக்கு அலுவலகங்கள் 6
ஆ. சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள் (சார் சம்பளக் கணக்கு அலுவலகம், புது
தில்லி உட்பட) 3
இ. மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் 6
ஈ. மாவட்டக் கருவூலங்கள் 32
உ. சார்நிலைக் கருவூலங்கள் 243
ஊ. ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை 1
எ. உதவி முத்திரைத்தாள் கண்காணிப்பாளர் அலுவலகம் 1