 |
மின்-நிர்வாக முயற்சிகள் மற்றும் IF & HRMS |
 |
• இத்திட்டம் முதற்கட்டமாக, கரூர் மாவட்டத்தில் ஜனவரி 2020-ல் துவக்கப்பட்டு படிப்படியாக அனைத்து மாவட்டக் கருவூலங்களிலும் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலகங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் இதர பட்டியல்கள் அனைத்தும் IFHRMS மூலமாக பெறப்பட்டு பாரத ரிசர்வ் வங்கியின் (RBI) இ-குபேர் (e-kuber portal) வழியாக பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
• அனைத்து மாவட்ட கருவூலகங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மூலம் பட்டியல் தயார் செய்து அனைத்து ஓய்வூதியர்களுக்கும்IFHRMS வாயிலாக ஓய்வூதியம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
• கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாய் இனங்களை மின் வரவாக(e-Receipt) மின் செலுத்துச்சீட்டு மூலமாக நேரடியாக பெறுவதற்கான நடைமுறை 08.02.2021 முதல் பொதுமக்கள் / அரசு துறை நிறுவனங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசிற்கு செலுத்த வேண்டியவர வினங்களை, மின்வரவுகளாக (e-Receipt) 24 மணி நேரமும் தங்கு தடையின்றி இணையத்தின் மூலம் (www.karuvoolam.tn.gov.in) செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சேவைகளுக்காக பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய நான்கு வங்கிகள் திரட்டல் வங்கிகளாக (aggregator banks) தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகியவங்கிகளின் வாயிலாக முதற்கட்டமாக அரசின் வருவாய்கள் பெறப்பட்டு அரசின் ரிசர்வ் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படுகிறது.
• அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
• புதிதாக சேரும் பணியாளர்களுக்கு இத்திட்டத்திலேயே மின்பதிவேடு துவக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
ஒம்/-
கூடுதல் இயக்குநர் (மின் ஆளுகை)
|