Header for the website
 
2
 

குழுக்காப்பீட்டுத் திட்டம்

 

I. முன்னுரை

குழுக் காப்பீட்டுத் திட்டம் 01.01.1978 முதல் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருந்தது. பிறகு இத்திட்டம் படிப்படியாக பின் வரும் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது:-

வ.எண்

நிறுவனங்கள்

துவக்கப்பட்டதேதி

01

உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்பணியாற்றும் பணியாளர்கள்

01-01-1978

02

அரசு உதவி பெறும் கல்லுரிகளில் பணியாற்றும் பணியாளர்கள்

21-06-1979

03

அரசு உதவி பெறும் தொழில் நுட்ப கல்லுரிகளில் பணியாற்றும் பணியாளர்கள்

25-05-1981

04

சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள்

01-11-1990

05

ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்கள்

01-07-1997

II. குழுக்காப்பீட்டுத் திட்டத்தின் நிர்வாகி

முதன்மைச் செயலர் / கருவூலக் கணக்கு ஆணையர் இத்திட்டத்தின் நிர்வாகியாவார்

III. குழுக்காப்பீட்டுத் திட்டத்தின் கட்டுப்பாட்டாளர்
இத்திட்டம் தொடர்பான அனைத்து தெளிவுரைகளும் நிதி (ஓய்வூதியம்)த் துறை, தலைமைச் செயலகத்திலிருந்து பெறப்படவேண்டும்.
IV. குழுக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர பணியாளர்களின் தகுதிகள்
உள்ளாட்சி அமைப்புகளான சென்னை, மதுரை, கோயமுத்துhர், திருப்பூர், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, வேலுர் மற்றும் துhத்துக்குடிமாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் (தற்போதுசிறப்பு கிராமபஞ்சாயத்துகள்), பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் பஞ்சாயத்து நகர குழுக்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பொதுபணியாளர்கள் மற்றும் மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள். பகுதி நேரப் பணியாளர்கள் அல்லது தினக்கூலி அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மீளப் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்லது ஓய்விற்கு பிறகு பணி நீட்டிப்பு செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு இத்திட்டம் பொருந்தாது.

பகுதி நேரப் பணியாளர்கள் அல்லது தினக்கூலி அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மீளப் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்லது ஓய்விற்கு பிறகு பணி நீட்டிப்பு செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு இத்திட்டம் பொருந்தாது.

V. அவரவருக்கான பணிகள்

அரசு குழுக்காப்பீட்டுத் திட்டம் தொடர்பான தெளிவுரைகள் தேவைப்படும் போதுநிதி (ஓய்வூதியம்) த்துறையால் வழங்கப்படும்

2. முதன்மைச் செயலர் / கருவூலக் கணக்கு ஆணையர் கருவூலக் கணக்குத் துறை

படிவம் 1 ஆண்டறிக்கை மற்றும் படிவம் 2 மற்றும் 3 காலாண்டு அறிக்கையை ஆய்வு செய்து செயல்படுத்துவது. படிவம் 3 அ அரையாண்டு அறிக்கையை பெற்று அவற்றை செயல்படுத்துவது மற்றும் தலைமைச் செயலகம் நிதி (ஓய்வூதியம்)த் துறைக்கு அனுப்புவது.

3. துறைத் தலைவர்

துறைத் தலைவர் குழுக்காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக துணை அலுவலகங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை துறைத் தலைவர் குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்வார்.

4. உள்ளாட்சிநிதி

உள்ளாட்சிநிதி பணரசீதுகள், செலுத்துச் சீட்டுகள், உரிமைகோரல்மற்றும் பணப்பட்டுவாடா ஆகியவற்றை உள்ளாட்சி கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை, மதுரை, கோயமுத்துhர், திருப்பூர், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, வேலுhர் மற்றும் துhத்துக்குடி மாநகராட்சிகள் ஆகியவற்றில் குழுக்காப்பீட்டுத் திட்டம் தொடர்புள்ள கணக்கும் மற்றும் பதிவேடுகளை தணிக்கை செய்ய வேண்டும். ஆய்வு செய்யும் அதிகாரிகள்அலுவலகங்களை ஆய்வு செய்யும் போது கேள்வித்தாய் படிவம் 10 உடன் கொண்டு செல்ல வேண்டும்.

5. உள்ளாட்சி அதிகாரிகள்

உள்ளாட்சி அதிகாரிகள் உள்ளாட்சி மன்றங்களில் பணம் பெற்றுவழங்கும் அதிகாரி 01.02.2016 முதல் ஒவ்வொரு பணியாளரிடமிருந்து ஒவ்வொருமாதமும் ஊதியத்திலிருந்து ரூ.60/- பிடித்தம் செய்து அத்தொகையை பிடித்தம் செய்தநாளிலிருந்து 15 நாட்களுக்குள்சார் கருவூலம் / மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட வேண்டும்.

Two registers as mentioned in Forms V and VI should be maintained by every local authority wherein particulars, such as, the total number of persons on the establishment list, total amount deducted, amount remitted, date of remittance etc., shall be entered. The names of the persons from whom the deductions have not been made should also be mentioned, indicating the reasons for the non-deduction, in the remarks column of Form VI.

All the local bodies should send a copy of From III A to the Government Data Centre, Guindy twice a year. The statement showing the staff position on the 1st January should reach the Data Centre on or before 15th of January and the position on the 1st July on or before 15th July of that year.

The Claim Reporting Unit Officer and the Sanctioning Authority ( Designated Authority for Claims ) should use the check slip mentioned in Forms XI and Form XII respectively in building up and maintaining their files, which shall be closed in D.Dis for future reference, audit etc.,

VI. குழுக்காப்பீட்டுத் திட்டத்தில் அவ்வப்போது பிடித்தம் செய்யப்பட்ட சந்தா மற்றும் பங்களிப்பு தொகை விவரங்கள்

வ.எண்

காலம்

பணியாளர்

சந்தாதொகை

நிர்வாகபங்களிப்பு

முதல்

வரை

ரூ.

ரூ.

01

01-01-1978

31-03-1985

1

4

02

01-04-1985

30-06-1989

3

8

03

01-07-1989

30-06-1991

5

15

04

01-07-1991

30-06-1996

10

20

05

01-07-1996

31-12-1996

10

45

06

01-01-1997

31-08-1997

10

65

07

01-09-1997

31-12-1998

20

55

08

01-01-1999

31.01.2006

20

55

09

01.02.2006

31.01.2016

30

55

10

01.02.2016

Till date

60

165

அரசாணை எண் 58 நாள் 22.02.2016-ன்  படி பணியாளர்களின் சந்தாதொகை ரூ.30/-லிருந்து ரூ.60/-ஆகவும்அரசாணை எண் 212 நாள் 19.07.2016-ன் படி நிர்வாகத்தின் பங்களிப்புத் தொகை ரூ.55/-லிருந்து ரூ.165/-ஆகவும் உயர்த்தப்பட்டது.

மதிய உணவு திட்ட பணியாளர்கள்

வ.எண்

காலம்

பணியாளர்

சந்தாதொகை

நிர்வாக

பங்களிப்பு

முதல்

வரை

ரூ.

ரூ.

01

01.11.1990

30.06.1991

5

15

02

01.07.1991

30.06.1997

10

5

03

01.07.1997

31.01.2006

20

5

04

01.02.2006

Till Date

30

5

கிராமபஞ்சாயத்துபணியாளர்கள்

வ.எண்

காலம்

பணியாளர்

சந்தாதொகை

நிர்வாக

பங்களிப்பு

முதல்

வரை

ரூ.

ரூ.

01

01.07.1997

31.08.1997

10

15

02

01.09.1997

31.01.2006

20

55

03

01.02.2006

31.01.2016

30

55

04

01.02.2016

Till date

60

165

நிர்வாக பங்களிப்புத் தொகை அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுரிகள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பொருந்தாது.

VII. கணக்குத் தலைப்பு

குழுக்காப்பீட்டுத் திட்டத்தின் கணக்குத் தலைப்புபின்வருமாறு:

0075 - பல்வகைப் பொதுவானபணிகள் 800 - ஏணையவரவுகள் - ஹறு உள்ளாட்சிமன்றங்கள், மானியஉதவிபெறும் பள்ளிகள், கல்லுhரிகள், தொழில்நுட்பக் கல்விநிறுவனங்கள்ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்களுக்கானதொகுதிகாப்புறுதித் திட்டம் 224 சந்தாக் கட்டணங்கள் 04 குழுக்காப்பீடு

01 - EMPLOYEES OF PANCHAYAT UNIONS, TOWN PANCHAYATS, PANCHAYAT TOWNSHIPS.

DP CODE: 0075 – 00 – 800 – AW – 0009

VIII. வாரிசுதாரர் நியமனம்

ஓரு பணியாளர் இறக்கும் பட்சத்தில், குழுக்காப்பீட்டுத் திட்டத்தின் மொத்தத் தொகையினை அவருடைய வாரிசுதாரருக்கு வழங்கிட ஏதுவாக படிவம் ஏஐஐ-ல் வாரிசுதாரர் நியமனம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு வாரிசுதாரர் நியமனம் செய்யாத பணியாளருக்கு அவருடைய முதல் மாத ஊதியம் வழங்க இயலாது.

IX. உரிமைகோரல்

பணியாளர் பணியிலிருக்கும் போது இறக்கும் பட்சத்தில், தொடர்புடைய அலகு அதிகாரி உரிமை கோரும் விண்ணப்பத்தை தயார் செய்து பின் வரும் ஆவணங்களுடன் படிவம் VIII-ல் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஓப்பளிப்பு ஆணையுடம் ஓப்பளிப்பு செய்யும் அலுவலர் மூலமாக இந்திய ஆயூள் காப்பீட்டு கழகம், சென்னைக்கு அனுப்பப்பட வேண்டும்.

1) இறப்புக்கானஆதாரம்

2) படிவம் ஐஏ (ஐ) , படிவம் ஐஏ(ஐஐ) மற்றும் படிவம் ஏஐ (ஐஐஐ) சான்றிதழின் பேரில் கழிக்க வேண்டிய இனங்கள் பணியாளரின் இறப்புவரையில் மேற் கொள்ளப்படும். நிலுவைத் தொகை மொத்தத் தொகையில் சரி கட்டப்படும்.

The certificate on deductions have been made from the employee, till his/her death. The arrear amount will be adjusted from the lump sum amount.

X .குழுக்காப்பீட்டுத் திட்டமொத்தத் தொகை

அரசாணை எண் 58 நாள் 22.02.2016-ன் படி, 01.02.2016 முதல்குழுக்காப்பீட்டுத் திட்டமொத்தத் தொகை ரூ.1,50,000/- லிருந்து ரூ.3,00,000/-ஆக உயர்த்தப்பட்டு, இறந்தபணியாளரின் வாரிசுதாரருக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகம், சென்னை- 2 அவர்களால்வழங்கப்படும்

XI. இறுதி தொகைபட்டு வாடா செய்தல்

அரசு கடித எண் 82537/ஓய்வூதியம்/79-3, நாள் 28.08.1980, நிதி (ஓய்வூதியம்) துறை, சென்னை- 9-ன் படி பயனாளிக்கு வங்கிக் கணக்கில் செலுத்தத் தக்க காசோலையாக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால்வழங்கப்படும். காசோலை பெறப்பட்ட தேதி, பயனாளிக்கு வழங்கப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் படிவம் ஐஓ- ல், தொடர்புடைய அலகு அதிகாரி பதிவேட்டில் பதிய வேண்டும்.

XII. தீர்வு தொகை தகறாறுகள்

தொகையை பெறுவதில் உரிமை கோருபவர்களுக் கிடையில் தவறான வாரிசு நியமனம், வாரிசு தாரர் நியமனமின்மை அல்லது வேறு காரணங்களால் தகராறு ஏற்படும் பட்சத்தில், தொகையானது இறுதி தீர்வு ஏற்படும் வரையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருப்பு வைக்கப்படும். அத்தொகை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது. இளையராக (Minor) இருப்பின், இளையரின் பெயரில் காசோலைப் பெறப்பட்டு வாரிசுதாரர் நியமனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் காசோலை ஒப்படைக்கப்படும். அவர் இளையர் சட்ட பூர்வ உரிமையை பெற்றுபணத்தை பெறும் காலத்திற்கு ஏற்ப ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காசோலையை வைப்பு வைக்க வேண்டும்.

XIII. தீர்வு தொகையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்கு

எந்த ஒரு பணியாளரிடமோ அல்லது இறந்து போன பணியாளரின் பயனாளியிடமோ இத்திட்டத்தின் தீர்வுத் தொகை தொடர்பாக ஆயுள் காப்பீட்டுக் கழகம் எவ்விதகடிதப் போக்குவரத்தையும் வைத்துக் கொள்ளாது.

XIV. இலாப பங்கீடு

இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் இலாபத்தில் 90ரூ அரசுக்கு உரியதாகும். செலுத்தப்படும் மொத்த பிரிமியத் தொகையிலிருந்து பின் வரும் இனங்களின் கழித்தலுக்கு பிறகு இலாபம் தீர்மானிக்கப்படுகிறது. :-

அ) அந்தஆண்டின் சரியானதீர்வுகள்
ஆ) நிர்வாகசெலவினங்களுக்காகபிரிமியத் தொகையில் 10ரூ
இ) பேரழிவுஇடர்பாடுகளுக்கானஇருப்புபிரிமியத் தொகையில் 2ரூ
இலாபப் பங்கீடு என்பது அடுத்து வரும் ஆண்டுக்கான பிரிமியம் செலுத் தொகையிலிருந்து கழித்துக் கொள்வதன் வாயிலாக அனுமதிக்கப்படும். நட்டம் ஏற்படின், அரசின் நட்டபங்கு (அதாவது90ரூ) எதிர்கால இலாபத்தை எதிர்நோக்கி கொண்டு செல்லப்படும்.

XV. குழுக்காப்பீட்டுத் திட்டபடிவங்கள்-உள்ளாட்சிமன்றங்கள்

01

படிவம் I

ஜனவரி 1ந் தேதி அன்றுள்ள படிஅலுவல பணியாளர்களின் எண்ணிக்கை

02

படிவம் II

இத்திட்டத்தில் புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ள பணியாளர்களின் அட்டவணை

03

படிவம் III

ஓய்வு மற்றும் மற்ற திரும்ப பெறுதல்களின் அட்டவணை

04

படிவம் III (A)

குழுக் காப்பீட்டுத் திட்டதரவுதாள்

05

படிவம் IV (i)

இறந்து விட்ட பணியாளர்களின் விவரங்களைக் காட்டும் அட்டவணை

06

படிவம் IV (ii)

இறந்து விட்ட பணியாளர்களின் விவரங்களைக் காட்டும் அட்டவணை

07

படிவம் IV(iii)

இறந்து விட்ட பணியாளர்களின் விவரங்களைக் காட்டும் அட்டவணை

08

படிவம் V

பணியாளர்களின் ஒவ்வொரு மாத எண்ணிக்கை காட்டும் அட்டவணை

09

படிவம் VI

ஒவ்வொரு மாத பணம் செலுத்தும் விவரங்களைக் காட்டும் அட்டவணை

10

படிவம் VII

குழுக் காப்பீட்டுத் திட்டவாரிசுதாரர் படிவம்

11

படிவம் VIII

குழுக் காப்பீட்டுத் திட்ட தொகை ஒப்பளிப்பு செயல்முறை ஆணைகள் மாதிரி

12

படிவம் IX

பணம் ஒப்பளிப்பு பதிவேடு

13

படிவம் X

ஆய்வு அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய கேள்வி தொகுப்பு

14

படிவம் XI

உரிமை கோரும் அலகிற்கான காசோலை சீட்டு

15

படிவம் XII

உரிமை கோரும் ஒப்பளிப்புசெய்யும் அதிகாரம் பெற்றவருக்கான காசோலை சீட்டு