|
 |
ஈட்டிய விடுப்பை பணமாக்குதல் |
 |
-
ஓய்வு பெறும் அரசு ஊழியர் ஓய்வு பெறும் நேரத்தில் அவரது கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பை அதிகபட்சமாக 240 நாட்களுக்கு உட்பட்டு பணமாக்க தகுதியுடையவர் ஆவார்.
-
கணக்கில் உள்ள சொந்த அலுவலின் பேரில் ஈட்டாவிடுப்பில் பாதியைய் அதிக பட்சமாக 90 நாட்களுக்கு உட்பட்டு பணமாக்க தகுதியுடையவர் ஆவார்.
-
ஓய்வுபெறும் அரசு ஊழியர் பணப்பலன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் ஏதும் சமர்ப்பிக்க தேவையில்லை.
-
காசாக்குதலுக்கான பணத் தகுதியில் ஊதியம் + தர ஊதியம், சிறப்பு ஊதியம், தனி ஊதியம் எடுத்துக் கொள்ளப்படும் மேலும் சீருடைப்படி, சலவைப்படி, மலை வாழ்ப்படி, ஊர்திப்படி மற்றும் பணப் படிதவிர மற்ற படிகள்அடங்கும்.
|
|