 |
குடும்ப ஓய்வூதியம் |
 |
-
பணியில் இருக்கும் போது இறக்கும் பணியாளர் ஓய்வூதியம் பெறும் பதவியில் குறைந்தது ஒரு வருட தொடர்ச்சியான பணியை முடித்த ஒரு அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்
-
அரசு பணியாளர் அவரது மரணத்திற்குப் பிறகு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்
குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியான நபர்கள்
-
திருமணமான அரசு ஊழியர் எனில் மனைவி / கணவன்
-
திருமணமாகாத அரசு ஊழியர் எனில் அவரை சார்ந்து இருக்கும் பெற்றோர்
-
25 வயதுக்குட்பட்ட தத்தெடுத்த மகன்கள் உட்பட மகன்கள்
-
25 வயதுக்குட்பட்ட தத்தெடுத்த திருமணமாகாத மகள்கள் உட்பட திருமணமாகாத மகள்கள்
-
அரசு ஊழியரின் மகன் / மகள் கோளாறு அல்லது மனநல குறைபாடு அல்லது உடல் ஊனமுற்றவர் அல்லது ஊனமுற்றவர் மற்றும் அவரது வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்க முடியாதவர்
குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியற்ற நபர்கள்
-
மறுமணம் செய்து கொண்ட வாழ்க்கைத்துணை / மனைவி / கணவன்
குடும்ப ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும்
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது அல்லது ஓய்வுக்குப் பின் இறந்த நாளிலிருந்து குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது
அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய பலன்கள்
-
குடும்ப ஓய்வூதியம்
-
இறப்பு க் கால பணிக்கொடை
குடும்ப ஓய்வூதியத்தின் கணக்கீடு
-
குடும்ப ஓய்வூதியம் கடைசியாக பெற்ற ஊதியத்தின் 30% விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. (ஊதியம் + சிறப்பு ஊதியம் + தனி ஊதியம்+தர ஊதியம்)
-
அரசு ஊழியர் இறக்கும் போது 7 வருடங்களுக்கும் குறையாத தொடர்ச்சியான அரசு பணி செய்தவர் / ஓய்வூதியம் பெறுபவர் 65 வயதிற்கு முன்பே இறக்கும் போது குடும்ப ஓய்வூதியம்உயர்த்தப்பட்ட வீதத்தில் அதாவது ஊதியத்தில் 50% (ஊதியம் + சிறப்பு ஊதியம் + தனி ஊதியம் + தர ஊதியம் கடைசியாக பெற்ற ஊதியத்தில் எடுக்கப்பட்டது) இறப்பிலிருந்து 7 வருடங்களுக்கு அல்லது ஓய்வூதியரின் 65 வயதுவரை எது முன்னரோ அது வரை வழங்கப்படும்
|