பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து இறுதி தொகை பெறுதல்
ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு மட்டுமே இறுதிதொகை பெறுதல் அனுமதிக்கப்படுகிறது.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் தேதிக்கு 4 மாதங்களுக்கு முன்பு மாத சந்தா பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும்.
இறுதி தொகை பெறுவதற்கு அரசு ஆணைஎண். 211 நிதி (ஓய்வூதியம்) துறை நாள்:27.5.2009-ன்படி சந்தாதாரரிடமிருந்து ஒருங்கிணைந்த விண்ணப்பம் அலுவலகத் தலைவரால் பெறப்பட்டு மாநில கணக்காயர் அவர்களின் அங்கீகரிப்பிற்காக அனுப்பப்படுகிறது.