-
இந்தத் திட்டம் 1-ஏப்ரல் 1984 முதல் நடை முறைக்கு வந்தது.
-
இந்த திட்டத்தில் சேருவது அரசு ஊழியரின் விருப்பமாகும்.
-
இது ஒட்டு மொத்தமாக அரசு ஊழியர் ஓய்வு பெறும் தேதியைத் தொடர்ந்து அடுத்த வேலை நாளில் செலுத்த வேண்டிய தொகையாகும்.
-
இந்த மொத்தத் தொகை அரசாங்க ஊழியரால் செலுத்தப்பட்ட சந்தா, அதற்கான வட்டி மற்றும் அரசுபங்களிப்புரூ .10,000/-ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
இந்த நிதிக்கான சந்தா 148 தவணைகளுக்குப் பிறகு அல்லது ஓய்வூதியத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இதில் எது முன்னதாக வந்தாலும் நிறுத்தப்பட வேண்டும்.
-
அலுவலகத் தலைவர் அவர்கள் பணத்தை கணக்கீடு செய்து, இத்தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-
அரசு ஊழியர் ஓய்வு பெறும் தேதியைத் தொடர்ந்து அடுத்த வேலை நாளில் இந்தத் தொகை வழங்கப்பட வேண்டும்.
-
அரசு பங்களிப்பு தொகையினை அகவை முதிர்வு ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் இயலாத சூழ்நிலைகளில் ஓய்வு பெறுபவர்கள் போன்றோர்கள் பெற தகுதியானவர்கள்.
-
இறப்பு-ஓய்வு பணிக் கொடை பெற (DCRG) நியமிக்கப்பட்ட வரும் இந்த தொகை பெற நியமிக்கப்பட்டவரும் ஒரே நபராக இருக்க வேண்டும்.