Header for the website
 
2
 

வயது முதிர்வு ஓய்வூதியம்

  Back     

வயது முதிர்வு ஓய்வூதியமானது ஓய்வு வயதை அடைந்த பிறகு வழங்கப்படுகிறது. (அதாவது)

                  

  உயர் பணி மற்றும் அடிப்படை பணிக்கு 60 ஆண்டுகள்

 FACTORS WHICH ஓய்வூதியம் கணக்கீடு செய்வதற்கான காரணிகள்

  1. நிகர பணிக்காலம் (அரை ஆண்டுகளில் குறிப்பிடப்படுகிறது)

  2. பணியாளர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் (20 அரை ஆண்டுகள்) நிகர பணிக்காலம் பணியாற்றி இருக்க வேண்டும்.

  3. முழு ஓய்வூதியம் 30 வருடங்களுக்கு (60 அரை ஆண்டுகள்) நிகர பணிக்காலம் பணியாற்றியவர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% வழங்கப்படுகிறது.

  4. நிகர பணிக்காலம் 30 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் (60 அரை ஆண்டுகள்) விகிதாசார அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

நிகர பணிக்காலம்

      நிகர பணிக்காலம் = மொத்த பணிக்காலம் - தகுதி இல்லாத பணிக்காலம்
     less Services not counting for qualifying service        

  • மொத்த பணிக்காலத்தில் நிரந்தர / அதிகாரப்பூர்வ / தற்காலிகமான அனைத்து பணிக்காலமும் அடங்கும்.

  • ஓய்வூதியத்திற்கு தகுதி இல்லாத பணிகள் / பணிக்காலங்கள்:

  • சிறார்பணி (18 வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பு செய்யப்படும் பணி / பணிக்காலம்)

  • மருத்துவ சான்றிதழ் இல்லாமல் எடுக்கப்பட்ட அசாதாரண விடுப்பு

  • முக்கிய தண்டனையாகக் கருதப்படும் பணி இடைநீக்க காலம்

  • மிகையாக துய்க்கப்பட்ட வரன்முறைப்படத்தப்படாத நாட்கள் / காலம்

குறிப்புகள் 

  1. மூன்று மாதங்கள் மற்றும் அதற்கு மேல் சமமான ஒரு வருடத்தின் ஒரு பகுதி நிறைவு செய்யப்பட்ட அரை வருடமாக கருதப்பட்டு ஓய்வூதிய பலன்களுக்கான தகுதியாக கருதப்படும்.

  2. பணிநீக்கம் செய்யப்பட்ட, நீக்கப்பட்ட அல்லது கட்டாயமாக ஓய்வுபெற்ற ஒரு அரசு ஊழியர், மேல்முறையீடு அல்லது மறுஆய்வில் மீண்டும் பணியமர்த்தப்பட்டால், அவருடைய கடந்தகால பணியை தகுதியுடைய பணியாகக் கணக்கிட உரிமை உண்டு

  3. ணி அல்லது பதவியில் இருந்து ராஜினாமா / பணித்துறப்பு செய்வது அரசாங்கத்தின் கீழ் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கடந்த கால பணியை / பணிக்காலம் இழப்பதாகும்.

சராசரி ஊதியம்

சராசரி ஊதியங்கள் = ஓய்வூதிய தேதிக்கு முன் கடைசியாக பெற்ற சராசரி 10 மாத ஊதியங்கள் (ஊதியம் + தர ஊதியம்)

 குறிப்புகள் 
ஓய்வூதிய சலுகைகளின் நோக்கத்திற்காக, ஊதியம் என்பது

  1.    ஊதியம்,

  2.    சிறப்பு ஊதியம்,

  3.    தர ஊதியம் மற்றும்

  4.    தனி ஊதியம்.

ஓய்வூதிய கணக்கீடு

ஓய்வூதியம் = 50% x கடைசி 10 மாதங்களின் சராசரி ஊதியம்

(முழு ஓய்வூதியம் பெற தகுதி உடைய பணிக்காலம் உள்ள பணியாளர்களுக்கு)

ஓய்வூதிய = 50% x கடைசி 10 மாதங்களின் சராசரி ஊதியம் / ஓய்வூதிய தேதிக்கு முன் கடைசியாக பெற்ற ஊதியம் x பணிக்காலத்தில் பணி முடித்த அரையாண்டுகள்
எண்ணிக்கை 60 ஆல் வகுக்கப்பட்டது

(குறைவாக பணிக்காலம் உள்ளதால் முழு ஓய்வூதியம் பெற இல்லாதபணியாளர்களுக்கு)

அரசாணை எண் 496, நிதி (ஓய்வூதியம்) துறை நாள் 1 ஆகஸ்ட் 2006 இன்படி 1.7.2006 அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பொருந்துபவை

முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற அதிகபட்ச தகுதி சேவை 33 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது

ஓய்வூதியம் கடைசியாக பெற்ற ஊதியத்தின் 50% அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

குறிப்பு: இப்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850/- 1.10.2017 முதல்