அறிவிப்பு
மற்றும்
படிவங்கள
Check your ECS Status ்
1. அறிவிப்பு :
ஓய்வூதியதாரர்கள்
நேர்காணல்
ஏப்ரல் 2013 முதல்
ஜுன் 2013 வரை அனைத்து
அரசு வேலை
நாட்களில்
நடைபெறும். நேர்காணலுக்கு
வர இயலாத
ஓய்வூதியதாரர்கள்
கீழ் காணும்
படிவத்தில்
ஆயுள் சான்று
அளிக்கலாம்.
2. படிவங்கள் :
i. ஓய்வூதியதாரர்கள்
ஆயுள்
சான்றிதழ்
ii. குடும்ப
ஓய்வூதியதாரர்கள்
மணம் /
மறுமணம் புரியாமை
/ பணிபுரியாமை
சான்றிதழ
3. அயல்நாட்டில் வசிக்கும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான அரசாணை.
4. சென்னை
ஓய்வூதியம்
வழங்கும்
அலுவலக செய்திக்
குறிப்பு:
கருவூல
விதிகளின்படி
கருவூலத்துறை
மூலம் ஓய்வூதியம்
பெறும்
ஓய்வூதியதாரர்கள்
ஆண்டுதோறும்
(ஏப்ரல் முதல்
ஜீன் வரை)
ஓய்வூதியம்
வழங்கும் அலுவலகத்தில், நேர்காணலுக்கு
வேலை நாளில்
வருகை
தரவேண்டும்.
அவ்வாறு
வரும்போது
ஓய்வூதியப்
புத்தகம் /
வங்கி பற்று -
வரவு
புத்தகம் /
வருமான வரி
கணக்கு எண்
மற்றும் ஒரு
புகைப்படம் ( Passport
size photo)
ஆகியவற்றையும்
கொண்டு
வரவேண்டும்.
குடும்ப
ஓய்வூதியதாரர்கள்
மறுமணம்
புரியா
சான்றும்
அளிக்க
வேண்டும் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
நேரில்
வரவியலாத
ஓய்வூதியதாரர்கள்
உரிய படிவத்தில்
வாழ்வுச்
சான்றினை
* ஓய்வூதிய
வங்கிக்
கணக்கு உள்ள
கிளை மேலாளர்
(அல்லது)
* அரசிதழ்
பதிவு பெற்ற
மாநில மற்றும்
மத்திய அரசு
அலுவலர்கள்
(அல்லது)
* வட்டாட்சியர்
/ துணை
வட்டாட்சியர்
அல்லது வருவாய்
ஆய்வாளர்
ஆகியோரிடம்
பெற்று
அனுப்ப
வேண்டும்
சான்றுகளுக்கான
மாதிரிப்
படிவத்தை (www.tn.gov.in/karuvoolam) இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
வாழ்வுச்
சான்றிதழுடன்
ஓய்வூதியதாரரது
ஓய்வூதியப்
புத்தகம், ஒரு
புகைப்படம் (Passport
Size Photo) மற்றும்
வங்கி பற்று -
வரவு
புத்தகத்தின்
முதல் பக்க
நகல், குடும்ப
ஓய்வூதியதாரர்கள்
மறுமணம்
புரியா
சான்று
ஆகியவற்றையும்
அளிக்குமாறு
தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில்
வசிக்கும்
ஓய்வூதியதாரர்கள்
அந்நாட்டிலுள்ள
மாஜிஸ்டிரேட், நோட்டரி, வங்கி
மேலாளர்
அல்லது
இந்திய தூதரக
அதிகாரியிடம்
வாழ்வுச்சான்று
பெற்று, சம்பந்தப்பட்ட
ஓய்வூதியம்
வழங்கும்
அலுவலகத்துக்கு
அனுப்ப
வேண்டும்.
வருமானவரி செலுத்த
வேண்டியவர்கள்
நடப்பு
நிதியாண்டுக்கான
தோராயமான
வருமானவரி
அறிக்கையினை, ஓய்வூதியம்
வழங்கும்
அலுவலகத்துக்கு
அனுப்ப
வேண்டும்.
ஓய்வூதியம்
வழங்கும் பணி
கணினிமயமாக்கப்படுவதால், தகவல்
தொடர்பிற்கும், வருமான
வரி
பிடித்தம்
குறித்த
விபரங்களை தாக்கல்
செய்வதற்கும்
வசதியாக
தற்போதைய இருப்பிட
முகவரி, தொலைபேசி
/ கைபேசி எண், மின்னஞ்சல்
முகவரி, வருமான
வரி கணக்கு
எண் ஆகிய
விபரங்களையும்
அளிக்குமாறு
கோரப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள்
ஏப்ரல் முதல்
ஜீன் வரை நேர்காணலுக்கு
வரத்தவறினாலோ
அல்லது சான்றொப்பம்
செய்யப்பட்ட
வாழ்வுச்
சான்றினை அனுப்பத்
தவறினாலோ
ஓய்வூதியதாரர்களின்
ஓய்வூதியம்
ஆகஸ்டு மாதம்
முதல்
நிறுத்தப்படும்
எனவும்
தெரிவிக்கலாகிறது.
குறிப்பு - பொதுத் துறை
வங்கிகள்
திட்டத்தின்
கீழ் ஓய்வூதியம்
பெறும்
ஓய்வூதியர்களுக்கு
வருடாந்திர
நேர்காணல்
நவம்பர்
மற்றும்
டிசம்பர்
மாதங்களில்
வங்கிகளில்
மேற்கொள்ளப்படுவதால்
அத்தகைய
ஓய்வூதியர்கள், ஓய்வூதியம்
வழங்கும்
அலுவலகத்தில் 01.04.2013 முதல்
தற்போது
நடைபெற்றுவரும்
வருடாந்திர
நேர்
காணலுக்கு வர
வேண்டியதில்லை
எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வூதியம்
வழங்கும்
அலுவலர்