Header

✔தமிழ்நாட்டில், வன்னியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காக, பல வன்னியர் வள்ளல்களால் உயிலாக எழுதிவைக்கப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு அவைகளை ஒருங்கிணைந்து, அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காக, அரசு 2009 ஆம் ஆண்டு வன்னியர் பொதுச் சொத்து நலவாரியத்தை உருவாக்கியது.

✔வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களால் அல்லது நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அத்தகைய பொறுப்பாட்சிகளின் சொத்துக்களையும், நிலைக்கொடைகளின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு, “தமிழ்நாடு வன்னியகுல க்ஷத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணிவருதல்) சட்டம் 2018” என்ற சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டமானது 04.02.2019 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

✔இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் கீழ்க்காணும், தலைவர், உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் – செயலாளர் அடங்கிய “தமிழ்நாடு வன்னியகுல க்ஷத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியம்” ஒன்று அரசால் உருவாக்கப்பட்டது.



வ.எண்
பதவிப் பெயர்
உறுப்பினரின் எண்ணிக்கை
1
தலைவர்
1
2
உறுப்பினர் (உச்ச நீதிமன்றம்/உயர் நீதிமன்றம்/ மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி)
1
3
உறுப்பினர் (அகில இந்திய பணியிலிருந்து)
1
4
உறுப்பினர் (சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களிலிருந்து)
2
5
உறுப்பினர் (பொறுப்பாட்சிகளின் பொறுப்பாட்சியர்கள் மற்றும் நிலைக்கொடைகளின் நிர்வாகிகள் சார்பில்)
1
6
உறுப்பினர் (வன்னியகுல க்ஷத்திரியர் சமுதாய நிறுவனங்கள் சார்பில்)
1
7
உறுப்பினர் (சட்டத் தொழில், தணிக்கை, வணிகம், கல்வி, பொறியியல் மற்றும் தொழிற்சாலை ஆகிய துறைகளில் புகழ் வாய்ந்த நபர்)
2
8
உறுப்பினர் (வன்னியகுல க்ஷத்திரியர் நலத்திற்காக பணியாற்றி உள்ள மகளிர்)
2
9
பதவி வழி உறுப்பினர். அரசுச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை - 9
1
10
பதவி வழி உறுப்பினர் ஆணையர்/ இயக்குநர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, சென்னை – 5.
1
11
தலைமை நிருவாக அலுவலர் /உறுப்பினர் – செயலாளர் (அரசு துணைச் செயலாளர் படிநிலைக்கு குறையாதவராக இருப்பவர்).
1
கூடுதல் 14

✔ இவ்வாரியம் சீரிய முறையில் இயங்குவதற்காக அரசால் 23 புதிய பணியிடங்களும், ஒருமுறை மானியமாக ரூ. 1 கோடி மற்றும் தொடர் மானியமாக ரூ. 25 இலட்சம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 2020-21-ஆம் ஆண்டிற்கு இவ்வாரியத்திற்கு நிருவாகச் செலவினங்களை மேற்கொள்ள ரூ. 1 கோடியும் மற்றும் 2021-22-ஆம் ஆண்டிற்கு ரூபாய் 1 கோடியும் நிர்வாக மானியமாக அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதியாண்டிற்கும் நிர்வாகத் தொடர் மானியமாக ரூ.1.00 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

✔ 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு வன்னியகுல க்ஷத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணிவருதல்) சட்டத்தின் பிரிவு 30(1)ன் கீழ், தமிழகத்திலுள்ள அனைத்து வன்னியகுல அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகளும் இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தினத்தந்தி மற்றும் தினமலர் நாளிதழ்களில் 15.08.2019 அன்று இவ்வாரியத்தால் விளம்பரம் செய்யப்பட்டது. மீண்டும் இவ்வாரியத்தில் பதிவு செய்ய தினத்தந்தி மற்றும் தினமனி ஆகிய நாளிதழ்களில் 25.06.2023 அன்று விளம்பரம் செய்யப்பட்டது.

✔ இவ்வாரியத்தால் இதுவரை 124 பொறுப்பாட்சிகள்/நிலைக்கொடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டறியப்பட்ட அறக்கட்டளைகளுள் 76 அறக்கட்டளைகள் இவ்வாரியத்தில் பதிவுசெய்யப்பட்டது.

✔ 35 வன்னியகுல க்ஷத்திரிய பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகளின் சொத்துப்பட்டியல் தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

✔ இவ்வாரியம் சீரிய முறையில் இயங்கும் வகையில் இவ்வாரியத்தால் பதினாறு வாரியக்கூட்டங்கள் முறையே 04.03.2019, 10.06.2019, 16.09.2019, 18.09.2019, 13.11.2019, 09.01.2020, 11.03.2020 20.07.2020, 08.09.2020, 14.10.2020, 04.11.2020, 14.12.2020, 24.02.2021, 17.08.2021, 08.10.2021 மற்றும் 14.12.2021 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாரியம் இரண்டாவது முறையாக மறுசீரமைக்கப்பட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் வாரியக் கூட்டங்கள் நடைபெற்றன அவை முறையே 17.05.2023, 12.07.2023, 27.09.2023, 27.11.2023, 30.01.2024, 06.03.2024, 20.06.2024.