வன்னியர் சமுதாய மாணவ, மாணவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு !
அரசு பணியில் சேர, மிக உயர்ந்த போட்டி தேர்வாக கருதப்படுவது மத்திய அளவில் UPSC மூலம் நடத்தப்படும் IAS / IPS போட்டி தேர்வும், மாநில அளவில் துணை ஆட்சியர் / காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு TNPSC மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வாகும். மேற்கண்ட தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் பயிற்சி நிலையங்கள் கட்டணத்துடன் பயிற்சி அளிக்கின்றன.
வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஏழை எளிய மாணவ / மாணவியர்கள் போட்டித்தேர்வு எழுத ஆர்வமிருந்தும் பணம் மற்றும் தங்கும் வசதி இல்லாத காரணத்தினால் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையங்களில் சேர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதுபோன்ற தகுதியும், திறமையும் உள்ள வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ/மாணவியர்களுக்கென்றே பிரத்யேகமாக தங்கும் விடுதி வசதியுடன், அனுபவமுள்ள பயிற்சி வல்லுநர்களைக் கொண்டு குடிமைப்பணி தேர்வுகளுக்கான (IAS / IPS) இலவச பயிற்சி, வள்ளல் P.T.Lee செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் சென்னையில் வேப்பேரி CNT வளாகத்தில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளன.
போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ தங்களது சுயவிவரங்களைக் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வள்ளல் P.T.Lee செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைச் சார்பில் நடத்தப்படும் தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் 100 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் முடியும் வரை பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி மையம் வள்ளல் P.T.Lee செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர், அறங்காவலர்களின் ஆலோசனை மற்றும் தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரியத்தின் ஆதரவுடன் செயல்படும்.
விண்ணப்பத்திற்கான கடைசி நாள் : 27.08.2023 தகுதித்தேர்வு நாள் : 03.09.2023 நேர்முகத்தேர்வு நாள் : 04.09.2023 பயிற்சி துவங்கும் நாள் : 06.09.2023
தொடர்புக்கு : அலைபேசி எண் : 88077 78029 / 93428 88707 மின்னஞ்சல் : ptleecniasacademy@gmail.com இணையதளம் : www.ptleecntrust.com
செயலாளர் P.T.Lee செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை வேப்பேரி, சென்னை – 7 கைபேசி : 98407 94202
The Board has constitued an Expert Committee to prepare a 15 Year perspective plan with the following members, to provide a policy frame work and guidance to the Board.
1. | Thiru. E.Dasaradhan, I.A.S Principal Secretary to Government (Retd) |
Chairperson |
2. | Thiru.A. Annadurai, I.A.S Managing Director, Tamil Nadu Civil Supplies Corporation | Member of the Board |
3. | Prof. Dr. D.Viswanathan Former Vice – Chancellor, Anna University | Member |
4. | Thiru. E.Mohan Raj, L & T Expert in Project Execution | Member |
5. | Thiru.V.Murugan General Manager (Retd.) Expert in Banking and Finance | Member |
6. | Thiru.A. Karunakaran Senior Divisional Manager (Retd.) Expert in Insurance | Member |
7. | Thiru.H.Venkatesh Expert in Construction Industry | Member |